இந்தியா

டெல்லி விமான நிலைத்தில் 10 மாதத்தில் 110 கிலோ கடத்தல் தங்கம்

டெல்லி விமான நிலைத்தில் 10 மாதத்தில் 110 கிலோ கடத்தல் தங்கம்

webteam

டெல்லி விமான நிலைத்தில் கடந்த 10 மாதத்தில் மட்டும் 110 கிலோ கடத்தல் தங்கம் பிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரை 10 மாதங்களில் டெல்லி விமான நிலையத்தில் மட்டும் 110 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டின் இதே 10 மாதங்களில் 78 கிலோ கடத்தல் தங்கம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்ட நிலையில், இந்த ஆண்டில் அது அதிகரித்துள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கக் கடத்தல் தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.