இந்தியா

ஒரே குடும்பத்தில் 11 பேர் தூக்கில் தொங்கிய பரிதாபம்: கொலையா?

ஒரே குடும்பத்தில் 11 பேர் தூக்கில் தொங்கிய பரிதாபம்: கொலையா?

webteam

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியுள்ளனர். அவர்கள் கண்கள் கட்டப்பட்டிருப்பதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லியில் உள்ள புராரி அருகிலுள்ள சன்ட் நகரில் தொழிலதிபர் ஒருவரின் வீடு உள்ளது. தொழிலதிபர் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். அவருடன் வழக்கமாக வாக்கிங் செல்பவர் இன்று வீட்டின் வாசலில் நின்று சத்தம் கொடுத்தார். பதில் இல்லை. கதவைத் தட்டினார். தட்டியதுமே கதவு திறந்துகொண்டது. உள்ளே பார்த்தவருக்கு அதிர்ச்சி. அந்த தொழிலதிபர் உட்பட சிலர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். இதையடுத்து அவர் போலீசாருக்கு போன் செய்து தெரிவித்தார்.

விரைந்து வந்த போலீசார் வீட்டை சோதனை செய்தனர். அப்போது 7 பெண்கள் உட்பட 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர். ஒருவரின் உடல் தரையில் கிடந்தது. அனைவரின் கண்களும் கட்டப்பட்டிருந்தன. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடல்கள் இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

மர்மமான முறையில் இறந்த அந்த தொழிலதிபர் பிளைவுட் மற்றும் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.