கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. இதில் 191 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. அதில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் அடங்கும். விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து நேரிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என மலப்புரம் எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 123 பேர் காயமடைந்திருப்பதாகவும் எஸ்பி தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவில் விமான விபத்தில் சிக்கிய விமானி 30 ஆண்டுகால அனுபவமிக்கவர் என தகவல் வெளியாகியுள்ளது.