மும்மொழிக் கொள்கை தொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் திமுக எம்.பிக்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நாகரிகமற்றவர்கள் என அமைச்சர் விமர்சித்ததால், திமுக எம்.பிக்கள் ஆவேசம்...
திமுக எம்.பிக்களை நாகரிகமற்றவர்கள் என கூறியதற்கு எம்பி கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமது வார்த்தையை திரும்பப் பெறுவதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர முதல்வர் ஸ்டாலின் முன்வந்தபோது சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம்... யார் அந்த சூப்பர் முதல்வர் என பதிலளிக்குமாறும் வலியுறுத்தல்..
பிஎம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை; தம்மை வற்புறுத்தவும் முடியாது.... சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லை என்ற பிரதானின் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சூசக பதில்....
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்... மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்பி கனிமொழி கடிதம்...
திமுக எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என தர்மேந்திர பிரதான் கூறியதில் என்ன தவறு என முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி... இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என சாடல்....
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மொரீஷியஸ் புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி... நாளை அந்நாட்டின் தேசிய தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்...
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்துடன் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன் சந்திப்பு... அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்று சேர இயலாது என தனிநபர் முடிவு செய்ய முடியாது என சசிகலா பேட்டி...
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு... முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை...
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீவெட்டி ஊர்வலம்... வெள்ளி வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை தரிசித்த பக்தர்கள்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தை வழிமறித்து பள்ளி மாணவன் மீது கொடூர தாக்குதல்... விரல்கள் துண்டான நிலையில் மாணவனுக்கு தீவிர சிகிச்சை... 3 பேர் கைது...
கேரளாவில் உடல் எடையை குறைப்பதற்காக யூடியூப் வீடியோக்களை பார்த்து டயட்டை பின்பற்றிய மாணவி உயிரிழப்பு... ஓராண்டாக சரியாக உணவு சாப்பிடாததால் வயிறு, உணவுக்குழாய் சுருங்கிய சோகம்...
பிஹாரில் நகைக்கடையில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை.... துப்பாக்கி முனையில் நகையை அள்ளிச் சென்ற கும்பல்...
பிரிட்டன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீது எண்ணெய் கப்பல் மோதியதில் பயங்கர தீ விபத்து... 32 பேர் உயிரிழந்ததாக தகவல்...