இந்தியா

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 103 வயது மூதாட்டி!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 103 வயது மூதாட்டி!

EllusamyKarthik

இந்தியாவில் கடந்த மார்ச் 1 முதல் மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த 103 வயது காமேஸ்வரி அண்மையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதன் மூலம் நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அதிக வயதானவராக உள்ளார் அவர். இதனை அவருக்கு தடுப்பூசி செலுத்திய மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 77 வயது மகனுடன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார் காமேஸ்வரி. அவருக்கு முன்னதாக மும்பையில் 100 வயதான ஜோஷி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தார். 

இதே போல நொய்டாவிலும் 103 வயது முதியவர் ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.