நூற்றாண்டு பெருமையும், பாரம்பரியமும் கொண்ட பிரெஞ்சு கார் நிறுவனமான Stellantis ஆட்டோ நிறுவனத்தின் Citroën கார் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் சி.கே பிர்லா குழுமத்துடன் இணைந்து இந்த காரை அறிமுகம் செய்கிறது அந்நிறுவனம். Citroën C5 Aircross SUV கார் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள் தமிழகத்தில் உள்ள உற்பத்தி கூடத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த கார் டீசலில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
எலெக்ட்ரிக் கார்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய Citroën நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம். அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
கடந்த 1934 முதல் இந்த கார் நிறுவனம் இயங்கி வருகிறது. ‘உலகம் முழுவதுக்குமான மக்களின் பேவரைட் கார் இப்போது இந்தியாவில்’ என Citroën தனது தயாரிப்பை சந்தைப்படுத்தி வருகிறது.