உலகமே நேற்று காதலர் தினத்தை, பரிசுகள், சாக்லேட்டுகள் மற்றும் பூக்களுடன் கொண்டாடி மகிழ்ந்து இருந்தனர். அதே போல் இந்தியாவில் பல பிரபலங்களும், தங்கள் ஜோடியுடன் பல்வேறு இடங்களில் கொண்டாடிய காதலர் தின வீடியோகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் ஒரு பெண் தனது காதலனை பழிவாங்கும் நடவடிக்கையாக 100 பீட்சாக்களை ஆடர் செய்து காதலனை எரிச்சலடையவைத்த சம்பவம் ஒன்று தற்பொழுது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தை கவர்ந்துள்ளது.
குர்கானைச் சேர்ந்த 24 வயது பெண் ஆயுஷி ராவத், இவரது முன்னால் காதலர் யாஷ்... இருவரும் காதலித்து வந்த நேரத்தில் ஒரு கட்டத்தில் இருவரின் காதலும் முறிந்துள்ளது. இதில் காதலன் யாஷை பழிவாங்க நினைத்த காதலி ஆயுஷிராவத் ஒரு தனித்துவமான மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.
அதன்படி ஆயுஷி தனது முன்னாள் காதலனின் வீட்டிற்கு 100 பீட்சாக்களை POD மூலம் அனுப்பினார், அதாவது டெலிவரிக்கு பிறகு யாஷ் பணம் கட்டவேண்டும்.
அதன்படி ஆயுஷி ஆடர் செய்து அனுப்பிய 100 பீட்சாக்களைக்கண்டு அரண்டு போன அவரது முன்னாள் காதலர் யாஷ், டெலிவரிக்கு பணம் செலுத்தமுடியாமல் டெலிவரி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வேடிக்கையான சம்பவம் ஆன்லைனில் வைரலாகி வருகிறது,
இது அந்த டெலிவரி நிறுவனத்தின் விளம்பரமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.