இந்தியா

ராட்டினம் அறுந்து விழுந்ததில் 10வயது சிறுமி பலி

ராட்டினம் அறுந்து விழுந்ததில் 10வயது சிறுமி பலி

webteam

ஆந்திரம் மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் குவிந்திருந்தனர். பொருட்காட்சியில் இருந்த மின்சார ராட்டினத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ராட்டினத்தின் ஒரு பெட்டி கழன்று விழுந்தது. இக்காட்சிக்கு அங்கு கூடியிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் அம்ருதா என்ற 10வயது சிறுமி உயிரிழந்தார். காயமடைந்த 6 பேர் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தையடுத்து உள்ளூர் மக்கள் ஆப்ரேட்டரை கடுமையாக தாக்கி பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், ராட்டினம் சுற்றிக்கொண்டிருக்கும் போதே அதன் போல்ட் கழன்றுவிழும் நிலையில் இருந்ததை கவனித்தோம். இதுகுறித்து அந்த ஆப்ரேட்டரிடம் தெரிவித்தோம். அவர் மதுபோதையில் இருந்தார். நாங்கள் கூறியதை பொருட்படுத்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார் எனக் கூறினர்.