கர்நாடகா pt
இந்தியா

தந்தையின் பீடி துண்டு... 10 மாத குழந்தையின் உயிரைப் பறித்த பரிதாபம்!

கர்நாடகாவில் தந்தை புகைத்துவிட்டு போட்ட பீடி துண்டை விழுங்கிய 10 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கர்நாடக மாநிலம் மங்களூரு டவுனில் அடையாறு பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி தேவி. இவரது கணவர் திருமண விழா அலங்கார பணியாளராக பணியாற்றி வருகிறார். பீகாரை சேர்ந்த இவர்களுக்கு 10 மாதத்தில் அனிஷ்குமார் என்ற குழந்தை இருந்தது.

குழந்தையின் தந்தை பீடி புகைப்பதற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது பீடியை புகைத்துவிட்டு வீட்டுக்குள்ளேயே போட்டு விட்டு சென்று விடுவார் என்று அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார். இந்தநிலையில்தான், சம்பவ தினமான ஜூன் 14 ஆம் தேதியன்றும், குழந்தையின் தந்தை பீடியை புகைத்துவிட்டு வீட்டுக்குள்ளேயே போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்த பீடி துண்டை அவரது 10 மாத குழந்தை வாயில் எடுத்து போட்டு விழுங்க முயற்சித்துள்ளது.

அப்போது, குழந்தையின் தொண்டையில் பீடி துண்டு சிக்கிய குழந்தை அவதியடைய இதனை கண்டு அதிரச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக வென்லாக் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இருப்பினும், ஜூன் 15 ஆம் தேதி காலை 10.25 மணியளவில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிர்கர தகவலை தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் , மங்களூரு கிராமப்புற காவல்துறையிடம் குழந்தையின் இறப்புக்கு காரணம் தனது கணவர்தான் என்று தெரிவித்துள்ளார். மேலும், வீட்டை சுற்றி பிடித் துண்டுகளை வைக்க வேண்டால் என்று தான் பலமுறை எச்சரித்ததாகவும் ஆனால், அவர் அதனை கேட்கவில்லை என்றும் இதனால்தான் தற்போது தனது குழந்தை இறந்துவிட்டது என்றும் கதறி அழுத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தநிலையில், தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.