இந்திய பங்குச் சந்தையில் ஒரே நாளில் 10 லட்சம் கோடி இழப்பை சந்தித்த முதளீட்டாளார்கள் காரணம் என்ன?
கடந்த சில வாரங்களாக இந்திய பங்கு சந்தையானது கடும் சரிவை கண்டு வருகிறது. அதன்படி இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 824 புள்ளிகள் சரிந்து 75366 புள்ளிகளிலும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 263 புள்ளிகள் குறைந்து 22,829 புள்ளிகளில் நிறைவடைந்தன. இன்று ஒரு நாளில் மட்டும் இந்திய முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி இழப்பை கண்டுள்ளனர்.
பங்குசந்தை இறக்கத்திற்கு காரணம்:-
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும் வட்டிவிகிதத்தில் மாற்றங்கள் வரும் அதன்படி பங்குசந்தையானது உயர்வை சந்திக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அமெரிக்க அரசாங்கம் அதன் ஏற்றுமதி வரியை அதிகரித்ததால், இந்திய பங்குசந்தை தொடர்ந்து இறக்கத்தை சந்தித்து வந்தது. மேலும் இந்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், முதளீட்டாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் பங்குகளை விற்று வருவதால் இந்திய பங்கு சந்தையானது இறக்கத்தை சந்தித்து வருகிறது.
பங்குசந்தையின் ஏற்ற இறக்கம்
கடந்த 7 மாதங்களில் இல்லாதவகையில் பங்கு சந்தையானது நிஃப்டி 23000 ற்கும் குறைவான புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலை இன்னும் நீட்டித்தால் நிஃப்டி 22,800, அல்லது 22,600 புள்ளிகளில் நிலைநிறுத்தப்படும்.
மாறாக நிஃப்டி 23400 யை கடந்தால் பங்கு சந்தை ஏற்றத்தைக்காணும். இருப்பினும் மத்திய பட்ஜெட் வரை பங்குசந்தையின் நிஃப்டியானது 23000 புள்ளிகளின் மத்தியில் வர்த்தகமானது நடைபெறும் என்று ப்ரோக்ரசிவ் ஷேர் ப்ரோக்கர்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் இயக்குநர் ஆதித்யா ககர் தனது கருத்தை கூறியுள்ளார்.