இந்தியா

கோடா அரசு மருத்துவமனையில் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

கோடா அரசு மருத்துவமனையில் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

webteam

ராஜஸ்தானின் கோடா என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கோடாவில் உள்ள ஜ.கே.லோன் மருத்துவமனையில் மட்டும் இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இந்தாண்டு மட்டும் 940 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் இந்த வாரத்தில் மட்டும் 12 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 10 குழந்தைகள் இறந்திருக்கும் நிலையில் போதிய ஆக்சிஜன் வசதி இல்லாததே குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உண்மை நிலவரத்தை கண்டறிய ஜெய்ப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.