இந்தியா

கர்நாடகா: மர்ம விலங்கு தாக்கியதில் 10 ஆடுகள் உயிரிழப்பு – அச்சத்தில் மக்கள்

kaleelrahman

கோலார் மாவட்டத்தில் மர்ம விலங்கு தாக்கி 10 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள மாலூர் தாலுகாவை சேர்ந்தவர் விவசாயி சந்திரப்பா. இவர் தனக்கு சொந்தமாக 10க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், சுக்கோண்டஹள்ளி என்ற கிராமத்தில் நேற்றிரவு இறைதேடி வந்த மர்ம விலங்கு தாக்கியதில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.

ஏற்கெனவே அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிராம மக்கள் கூறிவந்த நிலையில், ஆடுகளை சிறுத்தை தாக்கி இருக்கக் கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடுகள் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.