இந்தியா

குழாய்க்குள் மாட்டி தவித்த மலைப்பாம்பு.. பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை..!

webteam

கொச்சின் அருகே ஃபிளாட்டின் பிவிசி குழாயில் சிக்கியிருந்த மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கொச்சின் எர்ணாகுளத்தில் உள்ள காத்ரிகடாவ் என்ற இடத்தில், பிளாட்டில் இருக்கும் குடியிருப்புவாசிகள் பிவிசி பைப்பில் மலைப்பாம்பு சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கொடநாடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து அதிகாரிகள் வந்து பார்த்தபோது பாம்பின் தலை மட்டுமே வெளியில் இருந்தது. இதனால் அவர்களால் பாம்பை வெளியே எடுக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மேலாக பாம்பு குழாயில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காந்தி நகர் உதவி அதிகாரி வி.வி.பாபு தலைமையிலான குழு, பாம்புடன் இருந்த குழாயை அகற்றி நிலையத்திற்கு கொண்டு சென்றது. பின்னர் தீயணைப்பு துறையினர் குழாயை வெட்டி மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து விஷம் இல்லாத பாம்பை கொடநாடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.