ஒடிசா மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் 10 அடி நீளம் கொண்ட பாம்பு பிடிபட்டது.
ஒடிசா மாநிலம் பரிபாடா என்ற பகுதியில் இயங்கிவரும் ஆரம்ப சுகாதார மையத்தின் அறையில் காற்று புகுவதற்காக அமைக்கப்பட்ட
துளை உள்ளது. இதில் பாம்பு ஒன்று இருப்பதை சில ஊழியர்கள் பார்த்துள்ளனர். அந்த பாம்பு நீளத்தில் பெரியதாக இருந்ததால், அச்சம்
கொண்ட ஊழியர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை ஊழியர்கள் 10 அடி நீளம் கொண்ட பாம்பை
பல மணி நேரம் போராட்டத்துக்குப் பின்னர் பிடித்தனர். அந்த பாம்பு பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. சுகாதார மையத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட அப்பாம்பை அட்டைப் பெட்டியில் அடைத்து, மீண்டும் வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் ஆரம்ப சுகாதார மையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.