இந்தியா

விஜயவாடா கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலி: பிரதமர் இரங்கல்

Veeramani

ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலுள்ள தனியார் மருத்துவமனையின் கொரோனோ சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோரநிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் கூறுகையில் "விஜயவாடாவில் உள்ள ஒரு கோவிட் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் வேதனையடைந்தேன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் இப்போதுள்ள சூழ்நிலையைப் பற்றி விவாதித்தேன்.இந்த தீ விபத்தால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் உள்ள ரமேஷ் மருத்துவமனை, இந்த ஹோட்டலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளது. இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கொரோனா நோயாளிகள் 40க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ள ஆந்திர அரசு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.