1 மணி செய்திகள் முகநூல்
இந்தியா

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | 'நிம்சுலைடு விற்பனைக்கு தடை' முதல் 'உறை பனி எச்சரிக்கை' வரை!

இன்றைய 1 மணி செய்தியானது, Nimesulide விற்பனைக்கு தடை முதல் உறை பனி எச்சரிக்கை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் நிம்சுலைடு மருந்தின் உற்பத்தி, விற்பனைக்கு தடை . இது பாரு வகை கழுகுகளின் அழிவுக்கு காரணமாக அமைந்தது ஆய்வில் உறுதியான நிலையில் மத்திய அரசு நடடிவக்கை.

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் திடீர் நில அதிர்வு. பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் பரபரப்பு.

  • புத்தாண்டையொட்டி வடபழனி முருகனை தரிசிக்க குவிந்த சென்னை மக்கள், கோயிலுக்கு வெளியேயும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்.

  • நல்லவங்களை ஆண்டவன் கைவிட மாட்டான் என்று நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து. தொடர்ந்து, சென்னையில் வீட்டிற்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சி.

  • புத்தாண்டு பிறப்பை உற்சாகமாக கொண்டாடிய ஐரோப்பிய நாடுகள். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆட்டம் பாட்டத்துடன் ஆரவாரம்.

  • கள்ளக்குறிச்சி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை. 7 நாட்களாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லையா என காவல்துறைக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி.

  • கன்னியாகுமரியில் சூறைக்காற்று காரணமாக 2ஆவது நாளாக படகு சேவை ரத்து. புத்தாண்டையொட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்.

  • புதுச்சேரியில் அமலுக்கு வந்தது பெட்ரோல், டீசல் விலை உயர்வு. பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டு 96 ரூபாய் 26 பைசாவுக்கு விற்பனை.

  • வணிக சிலிண்டர்களின் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 14 ரூபாய் 50 காசுகள் குறைப்பு.

  • கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை. நீலகிரி, கொடைக்கானலில் இரவு நேரங்களில் உறை பனிக்கு வாய்ப்பு.

  • புத்தாண்டையொட்டி சென்னையில் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி பைக் ரேஸ். 242 பைக்குகளை பறிமுதல் செய்து நடவடிக்கை.