இந்தியா

1.10 கோடி FASTAG மின்னணு அட்டைகள் விற்பனை

1.10 கோடி FASTAG மின்னணு அட்டைகள் விற்பனை

jagadeesh

தேசிய நெடுஞ்சாலைகளில் மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் மையங்களில் இதுவரை ஒரு கோடியே 10 லட்சம் FASTAG வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 15ஆம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 523 சுங்கவரி வசூல் மையங்களில் FASTAG மின்னணு அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இதுவரை ஒரு கோடியே 10 லட்சம் FASTAGகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. FASTAG அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் மையங்களில் நாள்தோறும் 46 கோடி ரூபாய் வசூலாவதாக அதிகாரிகள் ‌தெரிவித்தனர்.

இந்த FASTAG முறையால் வாகனங்களின் போக்குவரத்து நேரமும் எரிபொருள் பயன்பாடும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.