”கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் COWIN இணையதளத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று சு,வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்,
“கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான COWIN ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக 9 மொழிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது” கண்டனம் தெரிவித்துள்ளார்.