இந்தியா

"பாக். செல்லுங்கள் என கூறிய காவலர் மீது நடவடிக்கை தேவை" அமைச்சர் வலியுறுத்தல்

"பாக். செல்லுங்கள் என கூறிய காவலர் மீது நடவடிக்கை தேவை" அமைச்சர் வலியுறுத்தல்

jagadeesh

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என கூறிய காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி வலியுறுத்தியுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக குறுகிய எண்ணம் கொண்டவர்கள், தவறான தகவல்களை பரப்புவதாக தெரிவித்தார். தேசிய குடிமக்கள் பதிவேடு காரணமாக, எந்த இந்தியரின் குடியுரிமைக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

உத்தரபிரதேச காவலர் மீதான புகார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என அவர் கூறியிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.