இந்தியா

“இந்தியர்கள் யாராவது தீவிரவாதத்தை ஆதரித்தால் சுடுங்கள்” - மல்யுத்த வீரர் காட்டம்

“இந்தியர்கள் யாராவது தீவிரவாதத்தை ஆதரித்தால் சுடுங்கள்” - மல்யுத்த வீரர் காட்டம்

webteam

தீவிரவாதத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இந்தியர்களை சுட்டுவிடுங்கள் என ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஸ்வர் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் கண்டனத்திற்குரியது. நடந்ததை தான் தடுக்கமுடியவில்லை. ஆனால் பதிலடி கொடுப்பதற்கான நேரம் இது. கொடுக்கும் பதிலடி இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைப் போல இருக்க வேண்டும். இந்தத் தாக்குதல் தீவிரவாதிகள் பிறப்பதற்கே ஆயிரம் முறை யோசிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். ஏதேனும் இந்தியர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருந்தால் அவரை சுட்டுவிடுங்கள். உயிரிழந்த வீரர்களுக்கு எனது இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார். 

முன்னதாக, ஜம்மு - காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் இந்திய உட்பட உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உட்பட உலக நாடுகள் பலவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட அனைத்து தலைவர்களும் இரங்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அத்துடன் அனைவருமே உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.