இந்தியா

அம்மா, மகள் பாசப் போராட்டம்! -ஸ்மிருதி இரானி  பதிவு

அம்மா, மகள் பாசப் போராட்டம்! -ஸ்மிருதி இரானி  பதிவு

webteam

இன்ஸ்டாகிராமில் ஒரு வித்தியாசமான பதிவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பதிவுகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் தனது மகளுடன் இருந்த ஒரு படத்தை பதிவிட்டிருந்தார். அதை வைத்து அவரது மகளின் பள்ளி நண்பர்கள் கேலி செய்துள்ளனர். இந்தக் கேலி செய்த விஷயத்தை மீண்டும் ஸ்மிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மறுபதிவை போட்டிருந்தார். 

இந்நிலையில் நேற்று மற்றொரு வித்தியாசமான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் அலுவலகத்திலிருக்கும் போது என் மகள் என்ன வேண்டும் எனக் கேட்டாள். அதற்கு நான் உன்னை கட்டிபிடிக்கவேண்டும் எனக் கூறினேன். இதனையடுத்து அவள் வீட்டிலிருந்து எனக்கு ‘ஹக்’ கொடுத்தாள்” எனக் கூறி ஒரு படத்தை பதிவிட்டுள்ளார். 
இந்தப் பதிவில் ஸ்மிருதி இரானி தனது மகள் சோயிஷ் என்று மறைமுகமாக தன்னை பின் தொடர்பவர்களிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.