காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு, அவரது சொந்தப் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்குபவர். இவர் இதுவரை ’@OfficeOfRG’ என்ற பெயரிலான தனது ட்விட்டர் கணக்கில் செயல்பட்டு வந்தார். இதில் தனது கருத்துக்களைப் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் கணக்கை @RahulGandhi என்ற தனது சொந்தப் பெயருக்கு மாற்றியுள்ளார். இதுபற்றி ட்விட் செய்துள்ள ராகுல் காந்தி, ’எனது ட்விட்டர் கணக்கு மாற்றப்பட்டு விட்டது. இனி @RahulGandhi என்ற கணக்கில் என்னை பின் தொடரலாம். தொடர்ந்து உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் பங்களிப்புகளையும் இந்த கணக்கில் நீங்கள் தரலாம்’ என்று தெரிவித்துள்ளார்.