இந்தியா

'பணமதிப்பு நீக்கத்தை போன்றதே என்ஆர்சி, என்பிஆர்' - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

'பணமதிப்பு நீக்கத்தை போன்றதே என்ஆர்சி, என்பிஆர்' - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

webteam

பணமதிப்பு நீக்கத்தைப் போன்று தேசிய குடிமக்கள் பதிவேடும் மக்கள் தொகை பதிவேடும் ஏழை எளிய மக்களை பாதிக்கும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பேசிய அவர், மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கைகள் ஏழைகளுக்கு வரி விதிப்பதை போன்றது எனச் சாடினார். பணமதிப்பு நீக்கத்தின் போது ஏழைகள் பாதிக்கப்பட்ட நிலையில் 10 முதல் 15 பேருக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்தது என ராகுல் குற்றஞ்சாட்டினார். 

இந்நிலையில் தற்போது அரசின் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் போதும் ஏழை மக்கள் லஞ்சம் தர வேண்டியிருக்கும் என்றும் பணமதிப்பு நீக்கத்தால் பலனடைந்த 10-15 பேரே இதன் இறுதிப் பலனையும் பெறுவார்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.