இந்தியா

“உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை” - மருத்துவர் மீது உறவினர்கள் சரமாரி தாக்குதல்!

ச. முத்துகிருஷ்ணன்

சத்தீஸ்கர் மாநிலம் முங்கெலி மாவட்டத்தில், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் லோர்மியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்த நிஷா என்ற பெண் தனக்கு சிகிச்சை அளிக்க சொல்லியுள்ளார். ஆனால் சரியான நேரத்திற்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் தினேஷ் சாகு அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள் சொல்லியும், மருத்துவர் தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க தொடங்கியதாக தாக்கப்பட்ட மருத்துவர் தினேஷ் சாகு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அரசு மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.