இந்தியா

உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ராகுல் ஹேஷ்டேக் - வைரலாகும் ப்ரியா வாரியர் படம்

உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ராகுல் ஹேஷ்டேக் - வைரலாகும் ப்ரியா வாரியர் படம்

rajakannan

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை அடுத்து #NoConfidenceMotion  ஹேஷ்டேக் உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தலையிலான அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், பாஜக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை சரமாரியாக முன் வைத்தார். கடும் ஆவேசமாக பேசிய மோடி, பேச்சை முடித்த பின்னர், நேராக மோடி இடத்திற்கு சென்று அவரை கட்டித் தழுவினார். இதனை மோடி எதிர்பார்க்கவில்லை. மோடியும் ராகுலை தட்டிக் கொடுத்து அனுப்பினார். இந்த நிகழ்வுகள் நாடாளுமன்றத்தில் கலகலப்பை உண்டாக்கியது. 

இதனையடுத்து, ராகுல் காந்தி நடந்து கொண்ட விதத்தை புகழ்ந்து ஒரு தரப்பினரும், இதுவும் காமெடிதான் ஒன்று மற்றொரு தரப்பினரும் ட்விட்டரில் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதனால், #NoConfidenceMotion ஹேஷ்டேக் இந்தியாவை தாண்டி உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அதுவும் முதல் இடத்தில் இது உள்ளது. அதோடு மட்டுமல்லாமல், Rahul Gandhi, Lok Sabha இவை இரண்டும் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. 

இது ஒருபுறம் இருக்க ராகுல் காந்தி கண் அடித்த படத்தை கேரள நடிகை பிரியா வாரியர் உடன் இணைத்து பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ப்ரியா வாரியரை விட நன்றாக கண் அடிக்கிறீர்கள், முன்னா பாயை விட நன்றாக கட்டிப் பிடிக்கிறீர்கள் என்று ஒருவர் ட்விட்டரில் விளையாட்டாக கூறியுள்ளார்.