இந்தியா

"இனி ஹலோ அல்ல வந்தேமாதரம் தான்" : மகாராஷ்டிரா அரசு அரசாணை வெளியீடு

webteam

மகாராஷ்டிரா அரசு அனைத்து அரசு அதிகாரிகளின் லேண்ட்லைன்கள் மற்றும் மொபைல் போன்களில் பேசும்போது "ஹலோ" என்பதற்குப் பதிலாக 'வந்தே மாதரம்' என்று பயன்படுத்த வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா கலாச்சார அமைச்சர் சுதிர் முங்கந்திவார், அரசு ஊழியர்களுக்கு தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலாக 'வந்தே மாதரம்' என்று சொல்ல உத்தரவிட்டுள்ளார். வந்தே மாதரத்தை வாழ்த்துச் சொல்லாகப் பயன்படுத்த அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் 'ஹலோ' என்ற வார்த்தை மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுவதாகவும், குறிப்பிட்ட அர்த்தம் இல்லாத ஒரு வார்த்தை உணர்வை தூண்டுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.