இந்தியா

`2019-க்குப் பின் எந்த காஷ்மீர் பண்டிட்டும் இடம்பெயரவில்லை’- நாடாளுமன்றத்தில் அரசு பதில்

நிவேதா ஜெகராஜா

முன்பை விட இப்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலைமை சற்று மேம்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு தொடர்பாக தற்போது நிலவும் நிலைமை குறித்து மாநிலங்களவையில் பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அதில் `2019 ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 2022 ஜூலை 9ம் தேதி வரை 128 பாதுகாப்பு படை வீரர்களும் 118 பொதுமக்களும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த 118 பொதுமக்களில் 5 பேர் காஷ்மீர் பண்டிட்கள். 16 பேர் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள்.

2019, 370-சட்டப்பிரிவு நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, எந்த காஷ்மீர் பண்டிட்டும் இடம்பெயரவில்லை’ எனக்கூறியுள்ளது. உயிரிழப்புகள், இதற்கு முந்தைய காலகட்டங்களை ஒப்பிடும் பொழுது சற்று குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போதைய நிலவரம் மேம்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.