இந்தியா

தோனி ரசிகர்களால் மானபங்கம் செய்யப்பட்டேன்” - ஆகாஷ் சோப்ரா

தோனி ரசிகர்களால் மானபங்கம் செய்யப்பட்டேன்” - ஆகாஷ் சோப்ரா

PT

இந்திய அணி விளையாடவுள்ள டி20 உலக கோப்பைப்போட்டியில் தோனியை நீக்கியதற்குத் தன்னையும் தனது குழந்தைகளையும் ரசிகர்கள் மானபங்கம் படுத்தியதாக முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் உடனான உரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார். "இது குறித்து அவர் கூறும் போது அடுத்ததாக நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான 14 பேர் கொண்ட இந்திய அணித் தேர்வில் தோனி மீதான எனது கருத்துகளைக் கூறினேன். ஆனால் இதற்காக நான் சமூக வலைத்தளங்களில் மானபங்க படுத்தப்பட்டேன். இது மட்டுமன்றி எனது குழந்தைகளும் அவர்களால் மானபங்க படுத்தப்பட்டார்கள்.

மேலும் பேசிய அவர் எம்.எஸ். தோனி, உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தோனி, கிரிக்கெட் விளையாடி ஒரு வருடம் ஆகிறது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவு அவருடையதுதான். அவர் இந்திய அணியில் விளையாடுவது குறித்த முடிவைத் தேர்வாளர்கள் தான் அறிவிப்பார்கள் என்று அவர் பேசினார்.