இந்தியா

“ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிய கணக்குகள் உதவவில்லை” - பியூஸ் கோயல் பேச்சு

webteam

ஐன்ஸ்டீன் புவிஈர்ப்பு விசையை கணக்குகள் உதவவில்லை என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் பேசியுள்ளார்.

இந்திய பொருளாதாரம் சரிவில் செல்வதாக பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றனர். அத்துடன் ஆட்டோ மொபைல் துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதற்கு காரணம் மக்கள் ஓலா, ஊபர் போன்ற செயலிகள் மூலம் கால் டாக்ஸியை புக் செய்து பயணிப்பதே என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்த விவகாரமும் பேசு பொருளானது. 

இந்நிலையில் வர்த்தக மையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல், “பொருளாதாரத்தின் அனைத்தையும் டிவி-யில் காண்பவற்றை வைத்து கணக்கு போடாதீர்கள். நாடு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நிலையை அடைய வேண்டுமென்றால் 12 சதவிகித வளர்ச்சியுடன் செல்ல வேண்டும். ஆனால் தற்போது 6-7% வளர்ச்சி தான் இருக்கிறது. எனவே கணக்கை இதில் பொருத்தாதீர்கள். இந்த கணக்குகள் ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிய உதவில்லை” என்று பேசினார். 

இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்தது நியூட்டன். ஆனால் பியூஸ் கோயல் ஐன்ஸ்டீன் எனக் கூறியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஹேஷ் டேக்குகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகின்றன.