செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
2022 ஆம் ஆண்டுக்குள் சுதந்திர இந்தியாவின் கனவுகள் நிறைவேறும் என்றும், புதிய இந்தியா உருவாகும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டில் அனைவரும் சமம் என்று கூறிய பிரதமர், சிறியவர், பெரியவர் என்ற பேதம் கிடையாது என்று தெரிவித்தார்.