இந்தியா

"மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடானது!" - அலகாபாத் உயர்நீதிமன்றம்

sharpana

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் உத்திரபிரேதசத்தில் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாததது வெட்கக்கேடானது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடானது எனத் தெரிவித்தது. அரசு மருத்துவமனைக்கு சென்றால் கொரோனாவுக்கு இறக்காதவர்கள் டெங்குக்குக்காக இறந்துவிடுவர் என வேதனை தெரிவித்தது. அந்த அளவுக்கு முறையான மின்சாரம், போதிய கழிப்பறைகள் இல்லாமல் மருத்துவமனைகள் உள்ளன. கொரோனா தடுப்பு விவாகரத்தில் யோகி ஆதித்யநாத் அரசு, ’என்வழி இல்லையேல் வேறு வழியே இல்லை என்ற அணுகுமுறையை கைவிட்டு, நீதிமன்றத்தின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்’ எனக் கூறியது.

மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 14 நாட்கள் முழுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதுதவிர உள்ளாட்சித் தேர்தலின் போது 135 அரசு ஊழியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.