மும்பையில் பெய்த கனமழையில் சிக்கித் தவித்த பூனைக்குட்டியை மீட்டு தனது மோட்டார் சைக்கிளில் பத்திரமாக கொண்டு சென்ற ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
மும்பையில் வடாலா பகுதியில் பெய்த பலத்த கனமழையின் மத்தியில் சிக்கித் தவித்த ஒரு பூனைக்குட்டியை ஒரு உள்ளூர்வாசி மீட்கும் வீடியோ பலரின் மனதைக் கவர்ந்து வருகிறது. அந்த நபர் பைக்கில் உட்கார்ந்து பூனைக்குட்டியை கவனமாக தன்முன் வைத்து அதன் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறார். நான் பூனைக்குட்டியை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி அங்கிருந்து நகர்கிறார். இந்த செயலுக்காக அந்த நபர் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.