உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் அதிலிருந்து மீண்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் உடற்சோர்வு உள்ளிட்டக் காரணங்களால் அவர் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது “ உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி, விரைவில் குணமடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் குணமடைந்து அவரது அன்றாட பணிகளையும், நாட்டிற்கான சேவையையும் செய்வார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.