காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களுடன் கலந்துரையாடியதை நாடகம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகச் சரிவடைந்துள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தார். அதன்படி மக்களுக்கான ஐந்தாம் கட்ட திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
அப்போது அவரிடம் டெல்லி அருகே நடந்து சென்று கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்களை ராகுல் காந்தி சந்தித்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன் ராகுல் காந்தி, நாடகம் ஆடுவதாக விமர்சனம் செய்தார். மேலும் பேசிய அவர் “இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருக்கும் வெளிமாநிலத்தவர்களிடம் உரையாடி நேரத்தை வீணப்படிப்பதை விட அவர்களின் கைப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு அவர்களுடன் நடந்து செல்லலாம். அத்துடன் காங்கிரஸ் ஆளும் இடங்களிலெல்லாம் அதிக ரயில்களைப் பெற்று வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்ல உதவ வேண்டும்
என்று அவர் கூறினார்.