இந்தியா

"இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தும் வல்லமை சீனாவுக்கு உள்ளது" - பிபின் ராவத்

Veeramani

இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தும் வல்லமையை சீனா பெற்றிருக்கிறது என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த கருத்தங்கம் ஒன்றில் காணொலி மூலம் பேசிய அவர், தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், சீனாவால் புதிய தொழில் நுட்பங்களுக்கு அதிக நிதி முதலீடு செய்ய முடிவதாகவும் கூறினார்.

இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக ஒரு திறன் வேறுபாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா மீது சீனா சைபர் தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்றது எனக் குறிப்பிட்ட அவர், இதனால் பெரும் இழப்பு ஏற்படும் என்பதை அறிவதாகவும் பேசினார். எனவே, இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்து வருவதாகவும் பிபின் ராவத் கூறினார்.