இந்தியா

தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம்: கராச்சி பேக்கரி விளக்கம்

தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம்: கராச்சி பேக்கரி விளக்கம்

webteam

கராச்சி என்ற பெயரை மறைக்கக் கோரி சிலர் கோஷமிட்டதைத் தொடர்ந்து அந்த பேக்கரி  விளக்கம் அளித்துள்ளது. 

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து பயங் கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக் கைகளை மத்திய அரசும் எடுத்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூர் இந்திரா நகரில் உள்ள பிரபலமான கராச்சி பேக்கரி முன்பு கூடிய சிலர், கடையின் பெயரை மாற்றும்படியும் கராச்சி என்ற பெயரை நீக்கும்படியும் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கராச்சி, பாகிஸ்தானில் உள்ள நகரம். இதனால் அந்தப் பெயரை நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். 

இதையடுத்து கடையின் உரிமையாளர், பெயர் பலகையில் ’கராச்சி’ என்ற வார்த்தையை மறைத்துள்ளார். அதோடு கடையின் முன் தேசிய கொடியையும் வைத்துள்ளார்.இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் நேற்று வைரலானது.

இந்நிலையில் கராச்சி பேக்கரி நிறுவனம் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘’இந்த பேக்கரியை உருவாக்கியவர் கான்சந்த் ராம்னானி. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது, கராச்சியில் இருந்து ஐதராபாத்துக்கு வந்தவர்.

பின்னர் 1953 ஆம் ஆண்டு, கராச்சி பேக்கரியை ஐதராபாத்தில் ஆரம்பித்தார். இதன் தரம் மற்றும் சுவை காரணமாக இந்தியா மட்டுமின்றி வெளி நாடு களிக்கும்  இதன் வளர்ச்சி சென்றிருக்கிறது.  கராச்சி பேக்கரி இந்தியரால்தான் ஆரம்பிக் கப்பட்டது. இதன் ஆன்மா கடைசி வரை இந்திய னாகவே இருக்கும். அதனால் இந்த பேக்கரி தொடர்பான எந்த தவறான கருத்துகளில் இருந்து விலகி நிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.