இந்தியா

வெள்ளிப்பனி மலைப்போல் காட்சி அளிக்கும் பத்ரிநாத் கோயில்

webteam

பனிப்பொழிவால் பத்ரிநாத் கோயில் முழுவதும் வெள்ளிப்பனி மலைப்போல் காட்சி அளிக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் உள்ள பத்ரிநாத் கோயில் உலகப் புகழ் பெற்றது. இந்துக்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் இதில் விஷ்ணு முக்கிய தெய்வமாக வீற்றிருக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாகும். 

இது வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்விய தேசங்களுள் ஒன்றாக பக்தர்களால் கருதப்படுகிறது. இமயமலையின் நிலவும் மிதமிஞ்சிய பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். அதாவது ஏப்ரல் மாதக் கடைசியிலிருந்து நவம்பர் தொடக்கம் வரை பக்தர்கள் வழிப்பாட்டிற்காக வந்து செல்வார்கள். 

இந்நிலையில் உத்தரகாண்டில் அளவுக்கு அதிகமான பனிப்பொழிவு பெய்து வருகிறது. இந்த மிக்கிய நகரங்களில் உள்ள வீடுகள் முழுவதும் பெரும் போர்வையைப் போல் பனி முழுவதுமாக மூடி உள்ளது. ‘வெள்ளிப் பனிமலை’ போல் பத்ரிநாத் கோயிலும் பனியால் மூடப்பட்டுள்ளது. ஆகவே அம்மாநில மக்களும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.