இந்தியா

'ராமாயண யாத்திரை' ரயில் பணியாளர்களின் காவி உடைக்கு எதிர்ப்பு

நிவேதா ஜெகராஜா

ராமாயண யாத்திரை நடந்த ரயிலில், பணியாளர்களுக்கு காவி உடை வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அதை மாற்றியுள்ள மத்திய ரயில்வே மன்னிப்பும் கோரியுள்ளது.

ராமாயணத்தில் தொடர்புடைய இடங்களை இணைக்கும் வகையில் ராமாயண யாத்திரை என்ற சிறப்பு ரயில் கடந்த 7ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் ஊழியர்கள் கழுத்தில் ருத்ராட்சம், காவி உடை அணிந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பணியாளர்களின் ஆடைக் கட்டுப்பாட்டிற்கு சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் சேவை செய்யும் ரயில் ஊழியர்களின் உடை அவர்களின் வேலைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது என்றும், இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றும் மத்திய ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலையில் அணியும் தலைப்பாகை பாரம்பரிய முறைப்படி மாற்றப்பட்டுள்ளதாகவும், ஆனால் கையில் அணியும் கையுறை மற்றும் முகக் கவசங்கள் மட்டும் காவி நிறத்தில் பயன்படுத்தப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.