இந்தியா

கேரளா தலைமைச் செயலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்: தடியடி நடத்தி கலைப்பு

JustinDurai

கேரளா தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸாரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி கேரளாவில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பினராயி விஜயனுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய இளைஞர் காங்கிரசை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்திற்கு எதிரே இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றபோது அவர்களைக் கலைக்க காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் காவல்துறையினரை தாக்க முற்பட்டனர். தொடர்ந்து தடியடி நடத்திய காவல்துறையினர், கண்ணீர்புகைக் குண்டுகளை பயன்படுத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இதையும் படிக்கலாம்: தாடி வைத்தால் திருமணத்துக்கு தடை.. ராஜஸ்தான் பஞ்சாயத்து முடிவால் பரபரப்பு! ஏன் தெரியுமா?