இந்தியா

”திட்டமிடல் இல்லாமல் ரயில்களை மத்திய அரசு அனுப்புகிறது” - மம்தா குற்றச்சாட்டு

”திட்டமிடல் இல்லாமல் ரயில்களை மத்திய அரசு அனுப்புகிறது” - மம்தா குற்றச்சாட்டு

webteam

தன்னை அரசியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதற்காகவே சரியான திட்டமிடல் இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயிலை மத்திய அரசு அனுப்புவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்

ஊரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்களை அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. பல ரயில்கள் மாநில அரசுகளுக்கு முன்னறிவிப்பு கொடுக்காமலேயே வருவதாகப் பல மாநில அரசுகள் குற்றம் சாட்டியுள்ளன. இதனால் கொரோனா பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னை அரசியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதற்காகவே சரியான திட்டமிடல் இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயிலை மத்திய அரசு அனுப்புவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், மாநில அரசுடன் ஆலோசித்து நாங்கள் அனுப்பிய அட்டவணையைப் பின்பற்றி ரயில்களை அனுப்ப வேண்டும். ஆனால் அவர்கள் திட்டமிடல் இல்லாமல் ரயில்களை அனுப்புகிறார்கள். நாங்கள் எப்படி கொரோனா பரிசோதனை செய்ய முடியும்?. கிராமங்களில் இதுவரை கொரோனா இல்லை. இதில் அரசியல் செய்யாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து மேற்கு வங்கம் வரும் தொழிலாளர்கள் 14 நாட்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டுமென அம்மாநில அரசு கூறியுள்ளது. ஊருக்குத் திரும்புகின்றவர்களில் 25% பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது மேற்கு வங்கத்திற்குச் சோகமான செய்தி என மம்தா தெரிவித்துள்ளார்