இந்தியா

“தன்னையே அவமானப்படுத்திக் கொள்கிறார்” - இம்ரானை கலாய்த்து சேவாக் வீடியோ

“தன்னையே அவமானப்படுத்திக் கொள்கிறார்” - இம்ரானை கலாய்த்து சேவாக் வீடியோ

rajakannan

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநாசபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியது குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஹர்பஜன் சிங், முகமது ஷமி ஆகியோர் ஏற்கனவே இம்ரான் கானை விமர்சித்திருந்த நிலையில், அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கும் இணைந்துள்ளார். 

சேவாக் தன்னுடைய ட்விட்டரை மிகவும் கலகலப்பான ஒன்றாகவே பயன்படுத்தி வருகின்றார். அவரது ட்விட்டர் பதிவுகள் பெரும்பாலும் கலாய்க்கும் தொனியிலேயே இருக்கும். இந்த முறை இம்ரான் கானை நேரடியாக கலாய்க்காமல் மற்றவர்கள் கலாய்த்ததை எடுத்து பதிவிட்டுள்ளார். 

அமெரிக்க ஊடகம் ஒன்றில் இம்ரான் கான் பேசிய வீடியோ அது. அந்த வீடியோவில், சீனா மற்றும் அமெரிக்காவின் உள்கட்டமைப்பு பற்றி இம்ரான் பேசிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் உள்கட்டமைப்பை அவர் விமர்சித்தார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், “நீங்கள் பாகிஸ்தான் பிரதமர் போல் பேசவில்லை, பிரோன்ஸை (Bronx) சேர்ந்த வாக்களர் போல் பேசுகிறீர்கள்” என போகிற போக்கில் கலாய்த்துவிட்டார்.

இந்த வீடியோவை பதிவிட்டுள்ள சேவாக், இம்ரான் கான் அவரை அவரே அவமானப்படுத்திக் கொள்வதற்கான வழிகளை கண்டிபிடித்துக் கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.