இந்தியா

”மத்திய அரசின் பொறுப்பற்ற, பாரபட்சமான தடுப்பூசி கொள்கை” - பிரதமருக்கு சோனியாகாந்தி கடிதம்

Veeramani

18 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் பொறுப்பை மத்திய அரசு கைவிட்டுவிட்டது பொறுப்பை கைவிட்ட செயல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

புதிய கோவிட்-19 தடுப்பூசி கொள்கை குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி,  பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் பொறுப்பை மத்திய அரசு கைவிட்டுவிட்டதை புதிய தடுப்பூசி கொள்கை குறிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

சோனியா காந்தி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "கொரோனாவால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட கடுமையான படிப்பினைகள் மற்றும் நமது மக்களுக்கு ஏற்பட்ட வேதனைகள் இருந்தபோதிலும், அரசாங்கம் ஒரு தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கொள்கையை தொடர்ந்து பின்பற்றுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது, இது தற்போதுள்ள சவால்களை அதிகரிக்க உறுதியளிக்கிறது. புதிய தடுப்பூசி கொள்கை மூலமாக 18 முதல் 45 வயதிற்குட்பட்ட மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்குவதற்கான பொறுப்பை இந்திய அரசு கைவிட்டுள்ளது . இது நமது இளைஞர்களுக்கான அரசாங்கத்தின் பொறுப்பை முழுமையாக கைவிடுவதாகும்" என்று அவர் கூறினார்.

இந்திய சீரம் நிறுவனம் புதன்கிழமை தனது கோவிட் -19 தடுப்பூசி 'கோவிஷீல்ட்' மாநில அரசுகளுக்கு ஒரு டோஸுக்கு 400 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு 600 ரூபாய் என்றும் விலையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.