ஹெல்த்

உலக தாய்ப்பால் வாரம்: வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாக்க தாய்மார்கள் செய்யவேண்டியவை!

Sinekadhara

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட முக்கியக் காரணம் குழந்தைக்கு ஊட்டச்சத்து அளித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுதான். இது பல்வேறு நோய்க் கிருமிகளிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்கும். இருப்பினும் மழை மற்றும் குளிர்காலங்களில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் பாலூட்டும் தாய்மார்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கவேண்டும்.

தாய்மார்கள் கவனத்திற்கு...

குழந்தைகளுக்கு பாலூட்டும்போது தாய்மார்கள் மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும். தீங்கு விளைவிக்கும் கிருமிகள் காற்றுவழியாக குழந்தைகளுக்கு பரவாமல் பாதுகாக்க இது உதவும்.

குழந்தைகளுக்கு பாலூட்டும் முன்பு தாய்மார்கள் தங்கள் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்.

பிரெஸ்ட் பம்ப்(breast pump) பயன்படுத்துவோர் கைகள் மற்றும் கருவிகளை சானிடைசர் பயன்படுத்தி சுத்தமாக்கிய பின்பே பயன்படுத்த வேண்டும்.

பாலூட்டும் முன்பு மார்பக பகுதிகள் கழுவி சுத்தமாக இருப்பதை தாய்மார்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருத்தல் நலம்.

ஒருவேளை தாய்மார்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் குணமான பிறகு குழந்தைக்கு பாலூட்டலாம்.

பாலூட்டும் தாய்மார்கள் செய்யவேண்டியவை...

தினசரி உணவில் ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள் மற்றும் பழங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். இவற்றில்தான் போதுமான அளவில் வைட்டமின்கள், புரதங்கள் நிறைந்திருக்கின்றன. இது இயற்கையாவே நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

பாலூட்டும் தாய்மார்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க அதிகப்படியான நீர்ச்சத்து பொருட்களை தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடலை சுத்திகரித்து, உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் தண்ணீர் மெட்டபாலிசத்தை சீராக்கும்.

புரதச்சத்து மிக்க உணவுகள் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் தாக்காமல் பாதுகாக்கிறது.

சுவாசப்பாதை ஆரோக்கியமாக இருக்க மூச்சு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே தினசரி காலை எழுந்தவுடன் சுவாச பிரச்னைகளை சீராக்கும் யோகாசனங்களை செய்யலாம்.

உலக தாய்ப்பால் வாரம் கட்டுரைகள்: