Laughter Yoga  Reuters
ஹெல்த்

நாம் ஏன் சிரிக்கிறோம்? மூளைக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!

மனித சிரிப்பின் இரு வகைகள் மூளையின் வேறுபட்ட நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளை கொண்டது.

PT WEB

மனித சிரிப்பின் இரு வகைகள் மூளையின் வேறுபட்ட நரம்பு மண்டலங்களால் இயக்கப்படுகின்றன. உணர்ச்சிவசப்பட்ட சிரிப்பு பழமையான மண்டலத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, மன மகிழ்ச்சி மற்றும் வலி நிவாரணத்தை வழங்குகிறது. உரையாடலின் போது இயல்பாகச் சிரிக்கும் சிரிப்பு, மனிதர்களுக்கே உரித்தான இயக்க மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

நம்மால் கட்டுப்படுத்தவே முடியாமல் தொடர்ந்து சிரிக்கும் உணர்வு நமக்கு ஏன் ஏற்படுகிறது? இதற்கான விடையை நரம்பியல் ஆய்வாளர்கள் தங்கள் புதிய ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களின் சிரிப்பில் இரு வேறு வகைகள் இருப்பதாகவும், அவை மூளையின் இரு வேறு நரம்பு மண்டல அமைப்புகளால் இயக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Happiness

நாம் உணர்ச்சிவசப்பட்டு, உயர் குரலில், கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் சிரிப்பானது மூளையின் பழமையான நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளுக்குப் பொதுவானது. இந்த வகை சிரிப்பு மூளையில் வேதிப்பொருட்களை வெளியிட்டு, மன மகிழ்ச்சியையும், வலி நிவாரணத்தையும் தருகிறது.

அதேவேளையில், உரையாடலின்போது நாம் இயல்பாகச் சிரிக்கும் சிரிப்பானது, மூளையின் இயக்க மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது மனிதர்களுக்கே உரித்தான, பேசும் திறனோடு தொடர்புடைய ஒரு நரம்பு அமைப்பாகும். இதன் மூலம், மனிதர்களின் சிரிப்பு வெறும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு மட்டுமல்லாமல், சமூகரீதியான தொடர்புகளுக்கும், வலி நிவாரணத்திற்கும் எவ்வாறு உதவுகிறது என்பது தெளிவாகிறது.