ஹெல்த்

7 மணிநேரத்துக்கு குறைவாக தூங்குறீங்களா? டிப்ரஷன் முதல் இதய நோய் வரை... என்னெல்லாம் வரும்?

JananiGovindhan

ஒவ்வொருவரின் உடல் நலத்தையும் பேணி பாதுகாக்க முறையான - ஆரோக்கியமான உணவுகளும், அன்றாட உடற்பயிற்சியும் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு போதுமான அளவு தூக்கம்.

ஏனெனில் முறையாக தூங்காவிடில் அது பல விதமான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். இதனால்தான் மருத்துவர்களும், நிபுணர்களும் தொடர்ந்து 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும் என கூறி வருகிறார்கள். தூக்கத்தை பொறுத்தவரை, ஒவ்வொருவரும் அவரவர் உடல் நலனைப் பொறுத்து, பல்வேறு காரணங்களினால் தூங்குவதில் சில சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும். உதாரணத்துக்கு தூக்கமின்மை முதல் தூக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்படுவது வரை, தூங்குவதற்கு பலவிதமான விஷயங்கள் ஒருவருக்கு தடையாக இருக்கலாம்.

ஒருவேளை நீங்களும் ஏதேனுமொரு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு, உங்களுக்கும் தூக்கம் முறையாக இல்லையென்றால், உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது முக்கியம். அதற்கு முன், தூக்கமின்மையால் என்ன மாதிரியான உடல்நலப் பிரச்சனைகள் எல்லாம் ஒருவருக்கு ஏற்படும் அல்லது ஏற்படலாம் என்பதை அனைவரும் அறிந்துக்கொள்ளுங்கள்.

Depression (மனச்சோர்வு): இரவு நேரங்களில் நன்றாக முறையாக தூங்காதவர்களுக்கே டிப்ரஷன் எனும் மனச்சோர்வு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. அவ்வாறு இரவில் தூங்காதபோது, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் பாதிக்கப்படுவதோடு, அது உங்கள் மனச்சோர்வின் அபாயத்தை அதிகரிக்கவே செய்யும்.

Respiratory problem (சுவாசப் பிரச்னைகள்): ஒருவர் நன்றாக தூங்காமல் இருந்தால், சளி, காய்ச்சல் போன்ற உபாதைகளும், சுவாச நோய்களும் உண்டாகும். அதுவும் ஏற்கெனவே சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் போது குறைவான நேரமோ அல்லது முறையாக தூங்காமல் இருந்தால், நிலைமையை மேலும் மோசமாகக்கூடும்.

Heart diseases (இதய நோய்கள்): போதுமான மணிநேரம் தூங்காமல் இருந்தால் அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில் தூங்கும்போது, உங்கள் உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது. ஆகவே நன்றாக தூங்காவிட்டால் உங்கள் உடலால் ரத்த நாளங்களை சரிசெய்ய முடியாது. இது இறுதியில் இதயம் சார்ந்த பல நோய்களுக்கு வித்திடும்.

Endocrine system (ஹார்மோன் பிரச்னைகள்): குறைவான நேரம் தூங்கினாலோ அல்லது முறையாக தூங்காமல் இருந்தாலோ அது உங்கள் ஹார்மோன்களையும், உடலையும் பாதிக்கலாம். நாளமில்லா அமைப்பு ஹார்மோன்களை வெளியிடாவிட்டால், உடலில் உள்ள செல்கள் பழுதடைவது பிட்யூட்டரி சுரப்பி உடலில் பல செயல்பாடுகள் பாதிப்பை சந்திக்கும்.