உகாண்டாவில் சிம்பன்சி குரங்குகள் தங்கள் காயங்களுக்கு மருந்தாக, மூலிகை தாவரங்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புடோங்கோ காட்டில் சிம்பன்சி குரங்குகள் மூலிகை தாவரங்களை பயன்படுத்துவதை பதிவு செய்துள்ளனர்.
சிம்பன்சி, ஒராங்குட்டான்கள், கொரில்லாக்கள் உள்ளிட்டவை காடுகளில் ஆரோக்கியமாக வாழ்வதற்கு, பல வகைகளில் இயற்கை மருந்துகளை பயன்படுத்துகின்றன என்ற விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளுக்கு, இது மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.