ஹெல்த்

உங்கள் வயதுக்கு எவ்வளவு வைட்டமின் டி தேவை என்று தெரியுமா?

Sinekadhara

தினமும் நாம் சாப்பிடும் உணவில் எவ்வளவு வைட்டமின் டி இருக்கிறது என நமக்கு தெரியாது. ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை என்றும் தெரியாது. வயதுக்கு ஏற்ப உடலில் வைட்டமின் டி அளவும் மாறுபடும்.

பிறந்த குழந்தையிலிருந்து 1 வயது வரை 0 mcg,
1 வயது முதல் 13 வயது வரை 15 mcg,
14 வயது முதல் 18 வயது வரை 15 mcg,
19 வயது முதல் 70 வயது வரை 15 mcg,
71 வயது முதல் அதற்குமேல் 20 mcg,
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 15 mcg வைட்டமின் டி ஒரு நாளுக்குத் தேவைப்படுகிறது.

சூரிய ஒளியிலிருந்து தேவையான வைட்டமின் கிடைக்குமா?

நேரடியாக சூரிய ஒளியின் கீழ் நிற்கும்போது வைட்டமின் டி கிடைப்பது உண்மைதான். அடர்த்தியான சரும நிறம் கொண்டவர்களுக்கு சூரியனிடமிருந்து வைட்டமின் டியை உறிஞ்ச அதிக நேரம் எடுக்கும்.

அதிக நேரம் நேரடியாக சூரியனுக்குக் கீழே நின்றால் சருமம் பாதிக்கப்பட்டு சரும நோய் வரும் வாய்ப்புகள் அதிகமாகும் என்றும் சொல்லப்படுகிறது.

நாம் காலை வெயிலில் நின்றால் வைட்டமின் டி போதுமான அளவு கிடைக்கும் என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணி வரை சூரிய ஒளியிலிருந்து போதுமான வைட்டமின் டியை பெற சிறந்த நேரம் என வைட்டமின் கவுன்சில் கூறுகிறது. அதே சமயம் இந்த நேரத்தில் புற ஊதாக் கதிர்களின் தாக்கமும் மிக மிக அதிகம்.

அதனால் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ளவேண்டும். இது டி 2 மற்றும் டி 3 என்ற இரண்டு விதமாக முறையே எர்கோகால்சிஃபெரோல் மற்றும் கோலேகால்சிஃபெரோல் என்று உணவுகளில் இருந்து கிடைக்கிறது. இது இரண்டும் ரத்தத்தில் வைட்டமின் டி அளவை அதிகரிக்கும்.

மீன்கள், பால், முட்டைக்கரு, சீஸ், காளான், ஆரஞ்சு ஜூஸ், ஓட்ஸ் போன்ற உணவுகளில் வைட்டமின் டி மட்டுமல்லாமல் கால்சியம் கூட நிறைந்திருக்கின்றன.