DD மார்பக அறுவை சிகிச்சை
DD மார்பக அறுவை சிகிச்சை முகநூல்
ஹெல்த்

இரண்டு நுரையீரலும் பாதிக்கப்பட்டவருக்கு உயிர் கொடுத்த DD மார்பக அறுவை சிகிச்சை! வியக்கும் மருத்துவம்

ஜெனிட்டா ரோஸ்லின்

தனது 2 நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு அவதியுற்ற மனிதரின் உயிரானது DD மார்பக மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக காப்பாற்றப்பட்டுள்ள நிகழ்வு மருத்துவத்துறையில் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேவி பாயர்

ஐக்கிய அமெரிக்காவின் செயின்ட் லூயி என்னும் பகுதியில் 34 வயது நிரம்பிய டேவி பாயர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 21 வயதில் இருந்தே ஒரு நாளைக்கு 1 சிகரெட் என்று தொடர்ந்து புகைப்பிடித்துள்ளார். இவருக்கு வாப்பிங் செய்யும் பழக்கமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏப்ரலில் கடும் மூச்சி திணறலால் அவதியுறவே முதலில் செயின்ட் லூயிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இவரின் 2 நுரையீரல்களும் கடும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

எனவே இதனை சரிசெய்ய இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் தீர்மானிக்கவே பின்னர் சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனவே நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து அதனை குணப்படுத்த x ray எடுத்து பார்த்த மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், “இவரது எக்ஸ் ரேவை நோக்கினால் அவ்விடத்தில் எதுவுமே இல்லை. 2 நுரையீரல்களும் முழுவதுமாக சீல் நிரம்பு காணப்படுகிறது. மேலும் இவருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்தால் அதை தாங்குவதற்கான வலிமையும் இவருக்கு இல்லை.

DD மார்பக அறுவை சிகிச்சை

அப்படியே செய்தாலும் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று மேலும் அதிகரிக்கத்தான் துவங்கும். எனவே அவரது இரண்டு நுரையீரல்களையும் அகற்றுவதுதான் ஒரே வழி” என்று தெரிவித்தனர். ஆனால் நுரையீரல்கள் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு நோய்தொற்றால் சரிசெய்ய இயலாத அளவிற்கு தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. எனவே நுரையீரல் அறுவை சிகிச்சையும் ஆபத்துதான்.

எனவே இதற்காக ஒரு புதுமையான அறுவை சிகிச்சை முறையை மருத்துவர்கள் கையாண்டனர். இதற்காக இவரின் 2 நுரையீரலும் அகற்றி மார்பு பகுதியில் 2 செயற்கை நுரையீரல்களையும் ( எக்ஸ்ட்ரா கார்போரல் மெம்ப்ரேன் ஆக்சிஜனேற்றம் அல்லது ECMO) DD மார்பக அறுவை சிகிச்சையின் மூலமாக பொருத்தி இதயத்தின் ஆக்கிஜன் பரிமாற்றத்தை சீர் செய்தனர்.

வெற்றிகரமாக முடிந்த இச்சிகிச்சை முறையின் மூலமாக இவருக்கு செயற்கை நுரையீரலானது வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதனை தொடர்ந்து குணடைந்த இவருக்கு சிறிது காலத்திற்கு பிறகு நுரையீரல் தானம் கிடைக்கப்பட்டு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து நல்ல நுரையீரலானது உட்செலுத்தப்பட்டது. இதுவே இம்முறைமூலமாக் முதல் முதலில் செய்யப்பட்ட சிகிச்சை முறை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தெரிவித்த பாயர் “ இதை என்னால் நம்ப இயலவில்லை. என் வாழ்க்கையில் எனக்கு இது இரண்டாவது வாய்ப்பு” என்று மிகுந்த மகிழ்ச்சியோ தெரிவித்தார்.