ஹெல்த்

LIFT-க்குள் கண்ணாடி பொருத்துவதன் சுவாரஸ்ய பின்னணி என்ன தெரியுமா?

JananiGovindhan

பொது இடங்களில் காரிலோ அல்லது எங்கு கண்ணாடி இருந்தாலும் உடனே அதில் முகம் பார்த்து சரி செய்துக்கொள்வது வழக்கமான செயலாகவே இருக்கும். ஆனால் லிஃப்டில் ஏன் கண்ணாடி பொறுத்தப்பட்டிருக்கிறது என எப்போதாவது தோன்றியதுண்டா? “கண்ணாடி எதுக்கு வெப்பாங்க? முகம் பார்க்கதானே” என்று சுலபமாக சொல்லிவிட முடியும்.

ஆனால் லிஃப்டில் கண்ணாடி பொருத்துவதற்கு பின்னணியில் அறிவியல் பூர்வமான உண்மையும் ஒளிந்திருக்கிறதாம். அது என்ன என்பதை பார்க்கலாம்.

ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்திற்கு செல்வதற்காக பொறியியல் ரீதியான கண்டுபிடிப்பு என அணுகாமல் அதில் பயணிக்கும் ஒரு நபரின் மன மற்றும் உடல்நல ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ளக் கூடியதாக இருக்கிறது லிஃப்டில் உள்ள கண்ணாடி.

அதன்படி, முன்னொரு காலத்தில் லிஃப்ட்-ஐ வெறும் quick access-க்காகவே பயன்படுத்தப்பட்டாலும் அதில் செல்வோருக்கு எப்போதும் ஒரு திக் திக் மனப்பான்மையே இருக்கும். கரன்ட் பாதிப்பால் எங்கே லிஃப்டில் மாட்டிக்கொள்வோமோ அல்லது லிஃப்ட் அறுந்து விடுமோ என்ற அச்சமெல்லாம் மேலோங்கும்.

இப்படியான பயத்தை போக்கவும், அதிலிருந்து மனதை திசைத் திருப்பவும் லிஃப்டில் கண்ணாடிகள் பொறுத்தப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. ஏனெனில் லிஃப்ட்-க்குள் கண்ணாடி பொருத்துவதன் மூலம் அதில் ஏறுவோர் தங்களது தோற்றத்தை பார்த்துக் கொள்வதால் லிஃப்டில் செல்வதால் ஏற்படும் கிளாஸ்ட்ரோஃபோபியா (Claustrophobia) என்ற அச்ச உணர்விலிருந்து விடுபடலாம்.

இதுபோக, வீல் சேரில் வரும் மாற்றுத் திறனாளிகள் லிஃப்டில் உள்ள கண்ணாடியை வைத்து வெளியே செல்ல ஏதுவாக இருக்கும் வகையிலும் பொறுத்தப்படுகிறதாம். 

Claustrophobia என்றால் என்ன?

வரையறுக்கப்பட்ட ஒரு பகுதியை கண்டு நொடிப் பொழுதில் ஏற்படும் அச்ச உணர்வையே Claustrophobia என்கிறார்கள். இதனால் பல விதமான ஆரோக்கிய சிக்கல்கள் உருவாகுமாம். ஆகையால் லிஃப்ட் போன்ற குறுகிய வரையறுக்கப்பட்ட இடங்களில் கண்ணாடிகளை பொருத்துவதால் anxiety என்ற மன பதற்றத்தை குறைக்க உதவுகிறது. மேலும் லிஃப்டில் உள்ள கண்ணாடியை பார்ப்பதன் மூலம் லிஃப்ட்டுக்குள் அதிக இடம் இருப்பதாக நம்பவும் வைக்கிறதாம்.