உலகளவில் நாள்தோறும் சமூக வலைதளங்களின் பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சிறுவர்களும் சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இது, அவர்களுடைய படிப்பு மற்றும் இதர செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பெற்றோர் தரப்பிலும் புகார் கூறப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் சிறார்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டநிலையில், சிறார்கள் மீதான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் பெருகத் தொடங்கி இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறினர்.
இந்தநிலையில்தான், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை செய்யும் வகையில் இணைய கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய மசோதாவானது ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து உளவியலாளர் தென்றல் தெரிவிப்பது என்ன? பார்க்கலாம்..
”எந்த மாற்றமாக இருந்தாலும் சிறிது சிறிதாகத்தான் அதை மேற்கொள்ள வேண்டும்.. ஆஸ்திரேலியாவில் ஒரு வருடம் கழித்துதான் அதை அமலுக்கு கொண்டு வர போகிறார்கள் ... இருப்பினும், குழந்தைகள் சமூக வலைதளங்களையும் செல்போனையும் பயன்படுத்த பழகிவிட்டனர். குழந்தைகளுக்கு மட்டும் இந்த சட்டம் என்பது அவ்வளவு சரியான ஒன்றாக தெரியவில்லை. எல்லாவற்றிலும் பாதிப்பு என்பது உள்ளது.. ஆனால், எப்பொழுது அது பாதிப்பாக மாறும் என்பதைதான் நாம் உற்றுநோக்க வேண்டும்.
பயன்பாடு என்பது அதற்குரிய நேரத்தை தாண்டி செல்லும்போதுதான் பாதிப்பு என்பது ஏற்படுகிறது. குழந்தைகளின் செயல் என்பது அவர்களின் பெற்றோரையும், அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியோர்களின் செயல்களையுமே ஒத்தியுள்ளது.
ஆகவே, குழந்தைகள் செல்போன் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள் என்றால், யாரை பார்த்து இதை கற்றுக்கொண்டார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு உணவை கொடுக்கும்போது கூட கையில் செல்போனை கொடுத்துதான் உணவையே ஊட்டுகிறார்கள்..அப்படி இருக்கும் பட்சத்தில், குழந்தைகளுக்கு முதலில் செல்போனை அறிமுகப்படுத்துவதே பெறோர்கள்தான்.
எனவே, பெற்றோர்கள்தான் முதலில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
பதின்பருவத்தில் இருக்கும் குழந்தைகளிடத்தில் பாலியல் கல்வி குறித்து எந்த ஒரு விழிப்புணர்வையும் நாம் ஏற்படுத்துவதே கிடையாது.. இதனால், அவர்களாக தெரிந்துக்கொள்ளும் பட்சத்தில் பாதிப்பைதான் ஏற்படுத்துகிறது.. நாமாக கற்றுக்கொடுக்கும் பட்சத்தில் சரியான ஒன்றை உள்வாகிக்கொள்கிறார்கள்.
இரண்டாவது,சமுக ஊடகங்களில் எதை பார்க்க வேண்டும், என்னனென்ன நன்மைகள் இருக்கிறது கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் நண்பர்களாக பெற்றோர்கள் பழகவேண்டும்,.. அச்சத்தை உருவாக்க கூடாது..அப்படி அச்சத்தை உருவாக்கும்பட்சத்தில், குழந்தைகள் தன்னை குறித்தான விஷயங்களை தனது நண்பரிடத்தில்தான் தெரிவிப்பார்கள்.
எப்பொழுதும் ஒன்றன் மீது “control" என்ற விஷயத்தை கொண்டு வருகிறோமோ... அப்பொது அந்த control ஐ தாண்டியே ஆக வேண்டும் என்ற எண்ணமும் உண்டாக அதிக வாய்ப்புள்ளது.
ஆக, இதனை அனுக வேண்டிய முறையே விழிப்புணர்வு என்பதில் இருந்துதான். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை எல்லா சமூக வலைதளங்களுக்கும் இந்த தடை என்பது கொடுக்கப்படவில்லை. யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுக்கு அனுமதி உள்ளது.
எனவே, இதுப்போல எந்தெந்த ஊடகங்கள் குழந்தைகளுக்கு தேவை என்பதை குறித்தான பட்டியலை முதலில் உருவாக்க வேண்டும் .
பாதிப்பு என்பதற்கு வயது வரம்பே கிடையாது. சமூக வலைதளங்கள் அதிகளவில் பயன்படுத்துவர்கள்,முதலில் சரியாக உறங்குவதில்லை..இதனால், உடலில் உள்ள உறுப்புகள் எதுவும் சரியாக வேலை செய்வது இல்லை.
இது இல்லையெனில், ஹார்மோன் பிரச்னை ஏற்படும் ..இது கவலை, மன அழுத்தம் மாதிரியான போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சி பெறும் கட்டத்தில் இருப்பதால் பாதிப்பு என்பது மற்றவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். எனவே, குழந்தைகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.